போலியான செயலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

Languages: தமிழ். post_translations: pll_62ccd60841f4f. Risk Level: High.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, போலியான இணைப்புகளைப் பயன்படுத்தி உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே, எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போது உங்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களை (கையடக்க தொலைபேசி இலக்கம், வாகனப் பதிவு இலக்கம், அடையாள அட்டை இலக்கம் போன்றவை) திருடுவதற்கும் டோக்கனில் பதிவு செய்யுமாறு குற்றவாளிகள் உங்களைக் கோருகின்றனர். பின்னர் திருடப்பட்ட தனிப்பட்ட தகவல்கள் சட்டவிரோத செயல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.

எனவே, நீங்கள் பெற்றுக் கொள்ளும் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

Recent Alerts