முகப்பு » எம்மைப் பற்றி

எம்மைப் பற்றி

எம்மைப் பற்றி

onlinesafety.lk பற்றி

கடந்த தசாப்தங்களில் தனிநபர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இணையம் உட்பொதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இணையத்தின் விரைவான வளர்ச்சியானது இணைய வெளியில் அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. ஏனெனில், இது பல்வேறு இணைய தாக்குதல்களைத் தூண்டுவதற்கான ஊடுருவு வாயிலாக தாக்கும் நபர்களுக்கு அமைகின்றது.

இலங்கையில் இணையத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதில் உள்ளடக்கம் குறைவாகவே உள்ளது. மேலும், உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கம் இன்னும் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கை CERT, தேசிய தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு மூலோபாயத்தின் அமுலாக்கத்திற்கு இணங்க, இணையத்தின் பாதுகாப்பான பயன்பாடு குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு www.onlinesafety.lk என்ற இணைய முகப்பினை பயன்படுத்துவதன் மூலம் இந்த இடைவெளியினை பூர்த்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இணையம் மற்றும் பிற தகவல் அமைப்புகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து சாதாரண குடிமக்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் ஊழியர்களுக்கு கல்வி புகட்டுவதனை இந்த இணைய முகப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பற்றி

இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி | ஒருங்கிணைப்பு மையம் (Sri Lanka CERT) i என்பது இலங்கையின் இணையப் பாதுகாப்பிற்கான தேசிய மையமாகும். மேலும், கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்புகளைப் பாதிக்கும் சமீபத்திய அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் பற்றிய நம்பகமான ஆலோசனையின் ஆதாரமாகும். மேலும், தேசிய மற்றும் உறுப்பு நிறுவனங்களுக்கு பதிலளித்தல் மற்றும் இணைய தாக்குதல்களில் இருந்து மீண்டு வருதல் போன்றவற்றிற்கு உதவுவதற்கான நிபுணத்துவத்தின் ஆதாரமாகும். இது ஜூன் 2006ம் ஆண்டில் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ICTA) இணைந்து நிறுவப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாக சொந்தமான நிறுவனமாகும். தற்போது இராஜாங்க தொழில்நுட்ப அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றது.

Content will available soon