இலவச இணையத்தள தரவு ஊழல்கள்

Languages: தமிழ். post_translations: pll_618e9eee700e9.

மேலோட்டம்

தரவு ஊழல்கள் மீண்டும் நடைபெறத் தொடங்கியிருக்கின்றன என்பது இலங்கை CERT’s கவனத்திற்கு வந்துள்ளது. தயவுசெய்து அத்தகைய ஊழல்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். அத்துடன் அது தொடர்பன அறிவைப் பெறுக. இவ்வாறு ஊழல் புரிகின்றவர்கள் புகழ்பெற்ற கம்பெனிகளிலிருந்து வருகின்றவர்கள் போன்று நடிப்பதோடு அறியாத பயனர்களைக் கவர்வதற்காக கொவிட் 19 தொற்றுடன் தொடர்புடைய தொனிப்பொருளைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள்.

விளக்கம்

இலவச தரவுகளைத் தருவதாக செய்திகள் இருக்கின்றன. இந்த வசதி புகழ் பெற்ற நிறுவனங்களிலிருந்து அல்லது வணிகப் பெயரிலிருந்து தரப்படுவதாக நடிப்பார்கள் அல்லது பயனாளியின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இந்தத் தொடர்பை கிளிக் செய்யும்படி சொல்வார்கள். இந்த செய்திகள் மோசடியான செய்திகளாகும். இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பணம் இந்த ஊழல்களைப் புரிகின்றவர்களுக்குச் சென்றடையும்.

இந்த ஊழல்களுக்கு பின்னால் உள்ள இணையத்தளம் எந்த நேரத்திலும் உங்களுடைய இணையவழி கணக்குகளையும் தரவுகளையும் இழப்பதோடு பிழையான தளங்களுக்கும் மாற்றப்படலாம்.

விளைவு

  ✻ மூன்றாம் தரப்பு செயற்பாடு பதியப்படல் மற்றும் உங்கள் கருவிக்கு பிழையான பொருட்கள் சேர்தல்
  ✻ இணையவழி கணக்குகளுக்கான பிரவேசத்தையும் தனிப்பட்ட தகவல்களையும் இழத்தல்

தீர்வு/ பணியாற்றல்

  ✻ நீங்கள் உங்களைப் பதிவுசெய்துகொள்ளுவதற்கு முன்னர் இந்த ஊக்குவிப்புகள் உண்மையானவை மற்றும் செல்லுபடியானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்கு நிறுவனத்தின் இணையத்தளத்தை பரிசோதிக்கவும்.

சான்றாதாரம்

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) என பாசாங்கு செய்கின்ற குற்றவாளிகளைப்பற்றி கவனமாக இருக்கவும்

உரிமை கைதுறப்பு

இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் “உள்ளவாறு” என்ற அடிப்படையிலானதாகும்.

Recent Alerts