முகப்பு » சமூக வலையமைப்பு » பிரதிபண்ணும் (copycat) இணையத்தளம்

பிரதிபண்ணும் (copycat) இணையத்தளம்

பிரதிபண்ணும் (copycat) இணையத்தளம்

பிரதிபண்ணும் இணையத்தளங்கள் அரச சேவைகள் மற்றும் வங்கிகள் போன்ற அரச திணைக்கள அல்லது உள்ளூராட்சி நிறுவன இணையத்தளங்கள் போன்று போலியாகத் தோன்றுகின்றன.

அரச சேவை ஊழல்கள்

அரச சேவைகளை வழங்குகின்ற பல தளங்கள் இருக்கின்றன.- குறிப்பாக விசா சேவைகள், கடவுச்சீட்டு சேவைகள் போன்றவை. அடிக்கடி இவை அலுவலக ரீதியானவை போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சேவைகளுக்குப் பணம் அறவிடப்படுகின்றது. உண்மையில் இவை இலவச சேவைகள் அல்லது மிக மலிவான சேவைகளாகும். நீங்கள் அரச சேவைகள் இணையத்தளத்தை கூகுல் செய்தால் இது முதலில் வரும். ஏனென்றால் கூகுலில் உயர் நிலையை அடைவதற்காக பல்வேறு இணையத்தள கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களுக்கு இணையத்தள முகவரிகளும் இருக்கின்றன. இவை சேவை தேடும் நபரைக் குழப்பி இது உத்தியோகபூர்வமான இணையத்தளம் என்று நம்பச் செய்கின்றனர். இலவச அலுவலக சேவைகளை வழங்க வேண்டிய ஆனால் சேவைகளுக்குப் பணம் அறவிடுகின்ற நிறுவனங்களை கூகுல் கேட்டுக்கொள்ளுகிறது. ஆனால் பெரும்பாலும் இந்த தகவல்கள் சிறந்த அச்சு முறையில் அல்லது மொத்தத்தில் கிடைக்காமலே இருக்கிறது.

ஆலோசனை குறிப்புகள்
  • தேடல் பொறியில் நீங்கள் முதலாவதாக காணும் இணையத்தளத்தை (தளங்களை) அவசரமான சூழ்நிலையிலும், முகவரி அதிகாரபூர்வமானதாகத் தென்பட்டாலும் தானியங்கியாக சிந்தித்து தெரிவு செய்ய வேண்டாம்.
  • அதற்குப் பதிலாக உத்தியோகபூர்வ இணையத்தளத்தை தேடுவதற்கு சற்று நேரத்தை செலவிடவும். அந்த தளம் “.gov.uk”, “gov.sl”, “gov.bw”, “gov.rw” என முடிந்தால் வழமையாக அந்த தளம் உத்தியோகபூர்வமானது என நீங்கள் சொல்ல முடியும்.
  • உத்தியோகபூர்வ சேவைகளைப் பெறுவதற்கு உத்தியோகபூர்வமற்ற தளத்தை நீங்கள் தெரிவுசெய்தால் கொடுப்பனவு பக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அந்த முகவரி https:// என ஆரம்பிப்பதை பரிசோதிக்கவும் (“secure” என்பதன் ‘s’ சிறியதாக இருக்கும்) அத்துடன் உலாவி சாளரத்தில் (browser window) ஒரு பூட்டப்பட்ட பூட்டு காணப்படும். இதற்கு 100% உத்தரவாதமில்லை. ஆனால் நீங்கள் நிச்சயமாக இதைக் கவனிக்க வேண்டும்.
உத்தியோகபூர்வமற்ற தளத்தைப் பயன்படுத்தியதன் மூலம் நீங்கள் அதிக பணம் செலுத்துவதற்கு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால்:
  • அந்த தளத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக கூறி பணத்தை மீளச் செலுத்தும்படி வற்புறுத்துங்கள்.
  • அதுபற்றி சம்பந்தப்பட்ட அரச திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யுங்கள்.