முகப்பு » சமூக வலையமைப்பு » தொழில் தேடுதல்

தொழில் தேடுதல்

தொழில் தேடுதல்

இணைய வெளியில் அதிகளவில் தொழில் வேட்டை நடைபெறுகிறது. அது வேகமானதும், இலகுவானதும் ஆகும். ஆனால் அங்கே உண்மையற்ற தொழில் இடுகைகளும் இருக்கின்றன. எனவே எப்பொழுதும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக
  • தனிப்பட்ட தகவல்களை தொழில் தேடும் தளங்களில் ஒருபோதும் வெளியிட வேண்டாம்
  • பயனாளி மீளாய்வுகளை (user reviews) பரிசோதிக்கவும்
பாதுகாப்பான தொழில் தள பதிவு
  • தொழில் தளத்தைப் பதிவுசெய்யும்போது, அந்த தளம் கண்ணியமானது என்பதையும் அதற்கு முகவரி உண்டு என்பதையும் நிரந்தர தொலைபேசி உண்டு என்பதையும் முதலில் உறுதி செய்துகொள்க.
  • உங்கள் விபரங்கள் “பொதுவானது”, “அந்தரங்கமானது” (confidential) அல்லது “தனிப்பட்டது” (தேட- முடியாத) என எதுவாக இருந்தாலும் அது சம்பந்தமாக பெரும்பாலான தொழில் தளங்கள் நெகிழ்வுத் தன்மையுடையனவாக இருக்கின்றன. கண்ணியமான தளங்கள் வித்தியாசத்தை விபரிப்பார்கள். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களுக்குப் பொருத்தமானதைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.
  • உங்கள் தேசிய காப்புறுதி இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், வங்கி கணக்கு தகவல், கடன் அட்டை பற்றிய தகவல், கடவுச் சீட்டு இலக்கம் அல்லது பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் தெரிவிக்க வேண்டாம்.
  • பாதுகாப்பான கடவுச் சொல்லைத் தெரிவு செய்து பயன்படுத்தவும். அத்துடன் அதை ஒருபோதும் எவருக்கும் வெளியிட வேண்டாம்.
பாதுகாப்பான சுயவிபர கோவை (CV)

உங்கள் சுயவிபர கோவையில் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் பகிர வேண்டாம். அதில் தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன.

மோசடிகளைத் தவிர்த்தல்

தொழில் தளமொன்றில் உங்கள் சுயவிபர கோவையைப் பார்த்த சாத்தியமான தொழில் தருநரிடமிருந்து நீங்கள் மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றால் தொடர்பை அணுகல் செய்யும்போது கவனமாக இருக்கவும். அத்துடன் அவை முறையான தொழில் இடுகைக்குச்(டiமெ) செல்கின்றது என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

வீட்டிலிருந்து வேலைசெய்யும் திட்டங்கள்

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டங்கள் ஊழல் புரிவோர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அநேகமாக அது உண்மையானதைப் போல் தோன்றலாம். எனவே தொடர்ச்சியான வேலைகளுக்காக இலாபம் ஈட்டும் சலுகைகளைப் பற்றி குறிப்பாக கவனமாக இருக்கவும்.

ஆலோசனை குறிப்புகள்
  • நேர்காணலில் சந்திப்பதற்கு முன்னர் சாத்தியமான தொழில் தருநர் நேர்மையானவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்க. அத்துடன் உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்க.
  • இணையவழியில் மாத்திரம் தொடர்பு கொண்ட நிறுவனத்துடன் வங்கி விபரங்;களை ஒருபோதும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  • குறிப்பாக ஏதேனும் தொழில்கள் அல்லது விசா போன்றவற்றிற்கு பணம் பரிமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.