முகப்பு » சமூக வலையமைப்பு » சமூக பொறியியல்

சமூக பொறியியல்

சமூக பொறியியல்

சமூக பொறியியல் என்பது தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு ஒருவரை ஏமாற்றுதல் அல்லது கையாள்தல் என்ற சொல்லைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் பிரபலமான / சாமானியர்களாலும் விரும்பப்படுகின்றது, ஏனென்றால் ஒருவருடைய கடவுச் சொல்லை ஊடுருவுவதைவிட (கடவுச் சொல் உண்மையிலேயே பலவீனமாக இருந்தால் ஒழிய) அவரே அந்த கடவுச் சொல்லை கையளிக்கும் வகையில் அவரை முட்டாளாக்குவது மிகவும் இலகுவானதாகும். சமூக பொறியியல் பொதுவாக பாதிக்கப்படுபவரை கடுமையாக நம்பச்செய்கிறது, சிலவேளைகளில் தொலைவிலிருந்து செயற்படுபவர்கள் மிகவும் நம்பக்கூடியவர்களாக செயற்படுவார்கள் அதாவது உங்களைப்பற்றிய தகவல்களை மோசடியாளர் ஏற்கனவே வைத்திருப்பார்.

தாக்குபவர் உங்களுடைய கணக்கை அணுகியவுடன் (உங்களுடைய அனைத்து கணக்குகளும் ஒரே கடவுச் சொல் அல்லது அதை ஒத்த கடவுச் சொல்லால் பாதுகாக்கப்படுமானால் இலகுவானதாக இருக்கும்) உங்களுடைய அடையாளத்தை அவர்கள் களவாட முடியும். வேறுவிதமாக சொல்வதாக இருந்தால், அவர்கள் ஆள் மாறாட்டம் செய்ய முடியும். அதாவது நீங்கள் தொடர்பு வைத்திருக்கின்றவர்களுக்கு அவர்கள் மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் அல்லது அவர்களுடைய சமூக ஊடக பக்கங்களுக்கு “நீங்கள் அனுப்புவதுபோல்” செய்திகளை அனுப்ப முடியும். அதாவது நீங்கள் மட்டும் தவறான செயல்களுக்கு, மோசடி செயல்கள் போன்றவற்றிற்கு உட்படுவது மாத்திரமல்ல நீங்கள் தொடர்பு வைத்திருப்பவர்கள் கூட அதற்கு உட்படுத்தப்படுவார்கள்.

சமூக பொறியியல் பொதுவாக அதிகம் நம்பச்செய்கிறது. சிலநேரங்களில் மோசடி செய்பவர்கள் ஏற்கனவே உங்களைப்பற்றிய தகவல்களை அறிந்து அதைக் கொண்டு உங்களை கடுமையாக நம்பச் செய்வார்கள்.

உதாரணமாக, அவர்கள் பின்வரும் தகவல்களை வைத்திருப்பார்கள்:
  • நிறுவனங்கள், சமூக ஊடக தளங்கள் போன்றவை உட்பட உங்களுடைய விபரங்களை வைத்திருக்கும் ஒருவருடைய கணக்கிற்குள் ஊடுருவ முடியும்
  • மோசடியான இணையத்தளத்தில் உங்களுடைய விபரங்களைப் பதியச்செய்வதற்கு உங்களைக் கவர முடியும். (குறிப்பாக இலவச ஐபோன் அல்லது ஏனைய கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற தளங்கள் இல்லை)
  • பயனரின் விபரங்களைச் சேகரிப்பதற்கு சட்டபூர்வமான இணையத்தளங்களுக்குள் ஊடுருவுதல் (Hack)
  • ஏனைய வேண்டாதவர்களிடமிருந்து (spammers) மின்னஞ்சல் பட்டியல்களை வாங்குதல்
  • வேண்டாத மின்னஞ்சல்களை இரத்துச் செய்யும் சேவை என நடித்து மோசடியான இணையத்தளங்களை அணுகச்செய்ய (click) மக்களை அழைத்தல்
  • மின்னஞ்சல் உள்ளடக்கம் அனுப்பப்பட்டு முன்னைய பங்குபற்றுனர் அழிக்காத cc (carbon copy) வரிசையிலுள்ள அனுப்புபவரின் பெயர்கள் / முகவரிகள்

வேறுவிதமாக சொல்வதாக இருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருந்தாலும்கூட உங்களை ஊடுருவ முடியும். எனவே இது நடந்ததாக அறிகுறி தென்பட்டால் விரைவாக பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக பொறியியல் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு ஆலோசனை குறிப்புகள்
  • பயனர் பெயர்கள், கடவுச் சொற்கள், PIN இலக்கங்கள் அல்லது அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட அல்லது நிதி தரவுகளை ஒருபோதும் வெளியிட வேண்டாம்.
  • அணுகுவதற்கு (click) முன்னர் சிந்திக்கவும். ஊடுருவ முயற்சிப்பவர்கள் அவசர நிலையை உருவாக்கி முதலில் செயற்பட வைத்து பின்னர் சிந்திக்கச் செய்வார்கள். உங்களுக்கு அவசரமான செய்தியொன்று கிடைத்தால் இது யாரிடமிருந்து வர வேண்டுமோ அவரிடமிருந்துதான் வந்திருக்கின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல வழி என்னவென்றால் அந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு வேறொரு வழியில் அந்த நிறுவனத்தை அல்லது நபரைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது WhatsApp செய்தி கிடைத்தால் தொலைபேசி மூலம் அந்த நபரைத் தொடர்புகொள்ள முயலுங்கள் (அது ஒரு நிறுவனமாக இருந்து, தொலைபேசி இலக்கம் தெரியாவிட்டால் கூகுல் செய்து பாருங்கள். ஊடுருவுபவர் சொல்லும் இலக்கத்தை அழைக்க வேண்டாம்) கவலைப்படுவதை விட பாதுகாப்பாக இருப்பது மேல்!
  • தோற்றுவாயை ஆராயவும். இணையத்தளத்திற்கு ஒரு தொடர்பு உங்களுக்கு அணுப்பப்பட்டால் அதை அலட்சியம் செய்யவும். அதற்குப் பதிலாக நிறுவனத்தை கூகுல் செய்து அவர்களின் இணையத்தளத்திற்குச் செல்லவும். அந்த விதமாக பிரதிபண்ணப்பட்ட இணையத்தளத்திற்கு தவறாக வழிகாட்டப்படும் ஆபத்து குறையும்.
  • தனிப்பட்ட தகவல் அல்லது கடவுச் சொல் என்பவற்றைக் கோருவதை அழித்துவிடவும். வங்கி அல்லது கண்ணியமான நிறுவனம் தொலைபேசி ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உங்கள் கடவுச் சொல்லை ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
  • அறிமுகமற்ற தரப்பினரிடமிருந்து வரும் மின்னஞ்சல் இணைப்புகளை தொடர்பின் மீது அணுகி திறக்க வேண்டாம்.
  • நிதி பிரச்சினைகள் பற்றிய அச்சுறுத்தல்கள் அல்லது வெகுமதிகள் உண்மையானவை போன்று தோன்றும் உண்மையில் அவை என்ன என்பதை அடையாளம் காணவும். உங்களுக்கு அல்லது உங்களுடைய இறந்த உறவினர் ஒருவருக்கு லொத்தர் பரிசு ஒன்று இருப்பதாக மின்னஞ்சல் கிடைத்தால் இலட்சக் கணக்கானவர்கள் அதை கிளிக் செய்திருப்பார்கள் அல்லது ஆயிரம் நபர்கள் அந்த மாதத்தில் அவர்களுடன் வியாபாரம் செய்திருப்பார்கள் – அதை அலட்சியம் செய்யவும். நீங்கள் வெற்றி பெற்ற பரிசைப் பெறுவதற்கு உங்கள் வங்கி விபரங்களை அனுப்ப வேண்டியிருக்கும். அல்லது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்கு உங்கள் அடையாள அட்டை விபரங்களைக் கேட்கலாம்.
  • பேரம் பேசுதல் கூட சந்தேகப்படக்கூடியதாக அமையலாம். முடிவு திகதி அண்மித்திருப்பதால் அதிக சலுகைகள் தரப்படுவதாகக் குறிப்பிட்டு மின்னஞ்சல்கள் வரலாம் (உதாரணமாக, ‘இன்றே வாங்கி 50% தள்ளுபடியைப் பெறுங்கள்’).
  • விளம்பரப் பகுதிகள், ஏலமிடும் பகுதிகள் போன்றவற்றில் அற்புதமான சலுகைகள் தருவதாக மோசடி செய்திகள் இருக்கலாம். விற்பனையாளருக்கு நல்ல வீதம் தரப்பட்டாலும் ஆபத்து ஏற்படலாம் (இத நன்றாகத் திட்டமிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும்) இந்த தூண்டில் இரையை உண்பவர்களின் பணத்திற்கு எதுவும் கிடைக்காமல் போகும் ஆபத்து உண்டு. அல்லது தீய எண்ணம் கொண்ட மென் பொருட்களால் பாதிக்கப்படுவதோடு அவர்களுடைய சொந்த தொடர்புகள் சுரண்டப்படலாம்.
  • உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் உங்கள் கணினிக்கு USB கருவிகளை அல்லது வெளி கருவிகளை இணைக்க வேண்டாம். அது உங்கள் கணினி உட்பொருளை சேதப்படுத்தலாம்.
  • ஏராளமான நபர்களுக்குப் பிரதியிட்டு உங்கள் மின்னஞ்சலை அனுப்ப வேண்டாம். அதற்குப் பதிலாக “BCC” (blind carbon copy) அனுப்புவது நல்லது. அந்த வகையில் நீங்கள் ஊடுருவப்பட்டாலும் (hack) மற்ற பிரதிகள் ஊடுருவுபவர் கைக்கு கிட்டாது.
  • ஒரு பதிவு(போஸ்ட்) அல்லது ட்வீட் நீங்கள் நம்புகின்றவரிடமிருந்து வருவதுபோல் இருந்தாலும், அவர்களுடைய கணக்கு ஊடுருவப்பட்டு (hack) அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம். சந்தேகம் எழுந்தால் வேறு விதமாகத் தொடர்புகொண்டு அவர்கள் அதை அனுப்பினார்களா என்பதை பரிசோதித்துக்கொள்ளவும்.