முகப்பு » சமூக வலையமைப்பு » சமூக ஊடகங்கள் தகவல் பெறுவதற்கு ஏமாற்றுதல்

சமூக ஊடகங்கள் தகவல் பெறுவதற்கு ஏமாற்றுதல்

சமூக ஊடகங்கள் தகவல் பெறுவதற்கு ஏமாற்றுதல்

சமூக பொறியியலில் தகவல் பெறுவதற்கு ஏமாற்றுதல் என்பது நீங்கள் நன்றாக அறிந்த ஒருவரை அணுகுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது மிகவும் பிரபலமானது, ஏனெனில் செய்தியைப் பெறுகின்றவர்கள் அந்த செய்தி, தொடர்பு அல்லது கோரிக்கை ஒரு நண்பரிடமிருந்து, உறவினரிடமிருந்து அல்லது ஒரு நிறுவனத்திடமிருந்து வருகிறது என நினைப்பதால் அதிகம் நம்புவார்கள். வங்கி, வியாபாரம் அல்லது அரசாங்க அலுவலகம் போன்ற சட்டபூர்வமானதாகத் தோன்றும் ‘பிரதிபண்ணும்’ இணையத்தளங்கள் பின்னர் பயனாளியை உள்நுழையும்படி கேட்பார்கள் – அந்த வகையில் கடவுச் சொற்கள் போன்றவை தாக்குபவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைக்கின்ற இணையத்தளம் அதன் சின்னம் மற்றும் உள்ளடக்கம் என்பவற்றைக் கொண்டு சட்டபூர்வமானதாகத் தோன்றும். உண்மையில் குற்றம் புரிகின்றவர்கள் சட்டபூர்வமான தளத்தின் மாதிரி வடிவமைப்பையும் உள்ளடக்கத்தையும் சரியாக பிரதிபண்ணியிருப்பார்கள். (பிரதிபண்ணப்பட்ட இணையத்தளங்களைப் பரிசோதிப்பது எப்படி என்பதை கீழே பார்க்கவும்) இந்த இணைப்புகள் அவர்களின் சாதனத்தை தீம்பொருட்களால் (malwares) பாதிக்கலாம்.

புகழ் பெற்ற தகவல் பெறுவதற்கு ஏமாற்றும் தாக்குதல்கள்
  • உங்கள் தகவலை ‘சரிபார்ப்பதற்கு’ கோரும் ஒரு பிரச்சினை

    வங்கியிலிருந்து அல்லது கடன் அட்டை வழங்குபவரிடமிருந்து, ஓர் அரச திணைக்களத்திடமிருந்து, உங்கள் பாடசாலை அல்லது கல்லூரியிலிருந்து, ஓர் அங்கத்துவ அமைப்பிலிருந்து அல்லது நீங்கள் வாங்குகின்ற இணையத்தளத்திலிருந்து உங்களுக்கு சில விபரங்களை – குறிப்பாக ஒரு கடவுச் சொல், PIN அல்லது ஏனைய அந்தரங்க தகவலை வழங்குவதற்காக ஒரு தொடர்பை பின்பற்றும்படி நம்பவைக்கும் ஒரு மின்னஞ்சலைப் பெறலாம். அந்த செய்தி முறைமையில் (system) சில மாற்றங்களை அவசரமாக செய்ய வேண்டியுள்ளது, இல்லாவிட்டால் உங்கள் கணக்கு மூடப்படும் என உங்களை எச்சரிக்கலாம்.

  • உங்களுடைய முதலாளியாக அல்லது சக தொழிலாளியாக நடிக்கின்ற எவரிடமாவது இருந்து வரும் ஒரு பணிச்செயல்.

    உங்கள் நிறுவனம் தற்பொழுது மேற்கொள்ளுகின்ற ஒரு முக்கியமான கருத்திட்டத்திற்கான இற்றைப்படுத்தலை, அல்லது சம்பள ஏற்றம் அல்லது பதவி உயர்வு பற்றிய தகவலை அந்த செய்தியில் கேட்கலாம். பெரும்பாலும் அந்த இணைப்பு எளிதான சொல் (word) ஆவணமாக அல்லது excel sheet ஆக இருக்கலாம். அது ஒரு வைரசைக் கொண்டிருக்கலாம்.

  • உதவி கோறும் ஓர் அவசர வேண்டுதல்

    வேறொரு நாட்டில் சிக்கியிருப்பதாக, அங்கே அவருடைய பொருட்கள் களவாடப்பட்டிருப்பதாக, தாக்கப்பட்டிருப்பதாக மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு நண்பனிடமிருந்து ஒரு செய்தி வரலாம். நீங்கள் பணம் அனுப்பினால் வீட்டுக்கு வரலாம் எனவும் எவ்வாறு பணத்தை (குற்றம் புரிபவருக்கு) அனுப்புவது என்றும் அந்தச் செய்தியில் இருக்கும்.

  • தகவல் பெறுவதற்கு ஏமாற்றும் நீண்ட செயல்கள்

    இதுவும் ஒரு வகையான ஊடுருவும் (hack) செயற்பாடாகும். இதில் ஈடுபடுபவர்களிடமிருந்து புதிய கொள்கை பற்றிய மேலதிக தகவலை அறிவதற்கு ஒரு செய்தி அல்லது மின்னஞ்சல். பாடசாலை, ஊழியர், முதலாளி போன்றவர்களிடமிருந்து உட்புகும் தகவல்களை, கூருணர்வு மிக்க ஊழியர் தரவுகளைப் பெறுவதற்கு அல்லது வெறுமனே பாதிக்கப்பட்ட இணைப்பை அல்லது தொடர்பை அணுகல் (click) செய்யும்படி கேட்பார்கள்.