வைரஸ் மற்றும் வேவுப்பொருள் (spyware)

வைரஸ் மற்றும் வேவுப்பொருள் (spyware)

வேவுப்பொருள் என்பது உங்களுடைய தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கு அல்லது உங்களை வேவு பார்ப்பதற்கு உங்கள் கணினிக்குள் அல்லது கையடக்க கருவிக்குள் பிரவேசிப்பதற்கு குற்றம் புரிபவர்கள் பயன்படுத்துவதாகும்.

வேவுப்பொருள் பெரும்பாலும் நீங்கள் கோருகின்ற நிகழ்ச்சியுடன் கண்ணுக்குப் புலப்படாமல் பதிவிறக்கம் செய்யப்படுகிறது – உதாரணமாக ஒரு விளையாட்டு – அல்லது ஒரு மின்னஞ்சல் இணைப்பாக உங்களுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் சட்டபூர்வமான மென்பொருளைப்போல் செயற்பட முடியும். அவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கும்.

அச்சுறுத்தி பணம் பறிப்பதற்காக அல்லது வேறு நோக்கங்களுக்காக காணொளி அல்லது படம் என்பவற்றுடன் வலைநிழலியினைக் (web camera) கட்டுப்படுத்துவதற்கு இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ( Blackmail என்பதைப் பார்க்கவும்).

மேலும் வேவுப்பொருள்/ தீயபொருள் (malware) பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன:
  • உங்கள் இணையவழி நடத்தையைக் கண்காணித்தல் (எந்த இணையத்தளத்திற்கு நீங்கள் பிரவேசிக்கிறீர்கள், யாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள், என்ன தட்டச்சு செய்கிறீர்கள் என்பவை உட்பட.)
  • வங்கி கணக்கு மற்றும் சமூக பாதுகாப்பு விபரங்கள் உட்பட – உங்களுடைய அந்தரங்க தகவல்களை அணுகுதல்.
  • வைரஸ் மற்றும் ஏனைய தீயபொருட்களை விநியோகித்தல்.
  • உங்களுடைய கணினி இயக்கியை (operation) மீள் வடிவமைத்தல் (reformat).
  • உங்களுடைய கோப்புகளை அல்லது கோப்பு முறைமைகளை அழித்தல், பதிவிறக்கம் அல்லது மாற்றம் செய்தல்.
வேவுப்பொருளை/தீயபொருளைத் தவிர்ப்பதற்கு
  • நம்பிக்கையற்ற மூலங்களிலிருந்து செயலிகளை அல்லது நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
  • தாமதமின்றி மென்பொருள் மற்றும் செயலிகள் என்பவற்றை இற்றைப்படுத்துக, அவற்றில் பாதுகாப்பு பொருத்துகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
  • மின்னஞ்சல் அல்லது இணைப்புகள் என்பவற்றின் தொடர்புகளை அணுகல் செய்வதில் கவனமாக இருங்கள்.
  • மின்னஞ்சலில் இணைப்புகளைத் திறக்கும்போது, அது நீங்கள் நன்றாக அறிந்தவரிடமிருந்து வந்தால் கூட மிகக் கவனமாக இருங்கள்.
  • உங்களுடைய வலைநிழலியினை (வெப்கெம்) பயன்படுத்தாதபோது மூடி வையுங்கள்.
உங்களுடைய வலைநிழலி (malware) ஊடாக நீங்கள் வேவு பார்க்கப்பட்டதற்கு இலக்காகியிருப்பதாக நினைத்தால்
  • அந்த சம்பவத்தை report@cert.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முறைப்பாடு செய்யுங்கள்.