தனிப்பட்ட தன்மை

தனிப்பட்ட தன்மை

இணைய இடைவெளியில் தனிப்பட்ட தகவல்களை இடுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.

  • உங்களைப் பற்றி இணையவழியில் இடும் தகவல் ஊடாக.
  • நீங்கள் நிறுவனங்களுடன் கணக்கை அமைத்துக்கொள்ளும்போது அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தகவல் ஊடாக.

உங்கள் கணக்கில் புகுவதற்கு முயற்சிக்கும்போது, சில நிறுவனங்கள் உங்கள் கணக்கைப் பரிசோதிப்பதற்கு உங்களுடைய முகப்புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டுமா எனக் கேட்பார்கள். இது இலகுவான தேர்வாகத் தோன்றும். ஆனால் நீங்கள் ஆம் என்றால், உங்கள் சமூக ஊடக கணக்கின் தகவல்களுக்கு அணுக்கம் பெறுவார்கள்.

உங்களுக்கு அது தேவையா?

நீங்கள் இணையவழியில் எதையாவது இட்டவுடன், உங்கள் தகவல் எங்கே செல்கின்றது அதை யார் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறீர்கள். உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் பின்வருவோருக்கு மிகவும் பெறுமதியானது,

  • சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்
  • இணைய வழி குற்றவாளிகள்
உங்களுடைய தனிப்பட்ட தன்மையைப் பத்திரப்படுத்திக்கொள்ளுவதற்கான உயர் ஆலோசனை குறிப்புகள்
  • உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் ஏனைய தொடர்பு விபரங்களை பொதுவில் இடுகை அல்லது பகிர்வு செய்ய வேண்டாம்.
  • உங்களுடைய சமூக ஊடக கணக்குகள் பற்றிய நிறுவுதல்களைப் பரிசோதிக்கவும்: தொலைபேசி இலக்கம், பகிரப்பட்ட படங்கள், படங்கள் போன்ற உங்களுடைய முன்குறிப்பு விபரங்களை யார் பார்க்க முடியும்? அவை நண்பர்களுக்கு மட்டும் நிறுவப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • குறிப்பாகப் படங்கள் அல்லது பரவலாக நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஏனைய உள்ளடக்கங்கள் பற்றி விசேடமாக கவனம் செலுத்த வேண்டும்.
  • மேலும் மற்றவர்கள் சம்பந்தப்பட்டுள்ள விடயங்களைப் பகிரும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களையும் அவர்களுடைய குடும்ப படங்களையும் முற்றிலும் அறிமுகமற்றவர்களுக்குப் பகிர்ந்தால் – இதைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்?
  • இது உங்களுடைய பொது ஊடக பிரதிபலிப்பு என்பதால் சமூக ஊடகங்களில் இவற்றைப் பகிரும்போதும் இடும்போதும் சிந்தியுங்கள். புதிய தொழிலைத் தேடும்போது, வழமையாக சாத்தியமான தொழில் தருநர் உங்களைப்பற்றிய தகவல்களைப் பெறும் முதல் இடம் இவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • இணையவழி வினாக்கொத்துக்களையும் போட்டிகளையும் எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். இது தீங்கற்ற வேடிக்கைபோல் தென்படும். ஆனால் அது உங்களைப் பற்றிய விடயங்கள், விருப்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும். இந்த புதிர்கள் உங்களையும் உங்களுடைய நண்பர்களையும் பற்றிய முன்விபரங்களை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன. இவை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்கப்படும். இந்த புதிர்களை உருவாக்குகின்றவர்களின் மனதில் ஒரே நோக்கம் தான் உண்டு: அது உங்கள் தரவிலிருந்து பணம் உழைப்பதாகும்.
  • உங்களுக்கு சொந்தமில்லாத கருவியைப் பயன்படுத்தினால் மாற்றுப் பெயர் கொண்ட முறையைப் பயன்படுத்தலாம் (incognito mode), அது எந்த கூருணர்வுமிக்க உலாவும் தரவுகளையும் சேமிக்காது.
  • செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது, அமைவிட சேவைகள், முகவரி புத்தகம் (தொலைபேசி பட்டியல்) படங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றிற்கு அணுக்கத்தை வழங்கும்படி அடிக்கடி கேட்கப்படுவீர்கள். ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்து, அணுக்கத்தை வழங்குவதற்கு முன்னர் இந்தத் தரவை அணுகுவதற்கு உண்மையிலேயே இந்த விண்ணப்பம் அவசியம்தானா? என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.
  • கொடூர செய்திகளை (bullying) பற்றிய திரையைப் படம்பிடிப்பதன் மூலம் அவற்றை முறைப்பாடு செய்யவும்.