காப்பு நகல் எடுத்தல்

காப்பு நகல் எடுத்தல்

உங்களுடைய படங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்ற மிக முக்கியமான தரவுகளை வன் இயக்கியில் (ஹார்ட டிரைவ்) அல்லது முகில் (cloud) – அடிப்படையிலான களஞ்சிய முறைமையில் காப்புநகல் எடுப்பதன் மூலம் அவற்றைப் பாதுகாத்துக்கொள்ளவும்.

பின்வருவன உட்பட, நீங்கள் ஏன் உங்கள் தரவுகளை இழக்கிறீர்கள் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன:
  • வன்பொருள் (hardware) துண்டிப்பு (உதாரணமாக, ஹார்ட் டிரைவ் துண்டிக்கப்படுதல் அடிக்கடி நிகழ்கிறது)
  • தற்செயலாக கோப்புகள் அழிதல்
  • களவு
  • தீ, வெள்ளப்பெருக்கு, தற்செயலாக சேதமடைதல்
  • வைரஸ் அல்லது வேவுபார்க்கும் பொருளால் சேதம்
  • செயற்பாட்டு முறைமையை (Operating System) மேம்படுத்தும்போது கோப்புகள் அழிதல்
உங்கள் தரவுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்

பிரதான தெரிவு புற இயக்கிகளைப் பயன்படுத்துதல், அல்லது முகில்(உடழரன) முறைமைகள்.

நீங்கள் எந்த முறைமையைத் தெரிவுசெய்தாலும், பின்வருவனவற்றைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்:
  • உங்கள் மொத்த தரவு இழப்புக்காக திட்டமிடுங்கள் (உதாரணமாக, உங்களுடைய அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய மடிக்கணினி காணாமற்போதல்).
  • புற வன் இயக்கியில் உங்களுடைய தரவு காப்பு நகல் எடுக்கப்பட்டிருந்தால், அது உங்கள் கணினியிலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அப்பொழுது அதை இழக்கும் ஆபத்து ஏற்படாது.

இணையவழி (முகில்) காப்பு நகல் எடுப்பதில் உள்ள நன்மை யாதெனில், உங்களுடைய காப்புநகல் கருவியைக் கொண்டு செல்லாமல் பன்முக கருவி ஊடாக தகவல்களை அணுக அது அனுமதிக்கிறது. எவ்வாறாயினும் அனைத்து இலவச முகில் சேவைகள் ‘மீள நிறுவும்’ செயற்பாட்டை வழங்குவதில்லை. இதில் முழுமையாக தங்குவதற்கு முன்னர் உங்கள் முகில் வழங்குனரின் நியதிகளையும் நிபந்தனைகளையும் நன்றாக வாசியுங்கள்.

ஏனைய ஆலோசனை

உங்கள் தரவை காப்பு நகல் எடுக்க USB ஞாபக கோலை, ஒலிப்பதிவு செய்யக்கூடிய இறுவட்டு அல்லது DVDகளைப் பயன்படுத்த வேண்டாம். இவை செலவற்ற, வசதியான முறையாகத் தோன்றினாலும், அவை வரையறுக்கப்பட்ட கொள்ளளவை பகிர்கின்றன. மேலும் இலகுவாக இழக்க அல்லது காணாமற்போக முடியும். இறுவட்டு மற்றும் DVDகள் கூட உங்கள் தரவை மாற்றுவதற்கு மிக மெதுவாக செயற்படுகின்றன.

எப்பொழுதும் உங்கள் தரவை இழக்க முடியும் – எனவே காப்புநகல் திட்டத்தை வைத்திருங்கள்.

இதோ சில ஆலோசனை குறிப்புகள்.
  • ஒழுங்காக காப்புநகல் (Backup) எடுங்கள். நீங்கள் அடிக்கடி இதை மேற்கொண்டால், நீங்கள் அடிக்கடி இழக்க விரும்பாத தரவுகளை சேர்த்துக்கொள்ள முடியும். சில காப்புநகல்களை தினசரியும் மற்றவற்றை மாதம் ஒருமுறையும் காப்புநகல் எடுத்தால் போதும்.
  • உங்கள் காப்புநகல் வேறுபட்ட அமைவிடத்தில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஆகக் குறைந்தது ஒரு காப்பு நகலை வேறு பௌதிக அமைவிடத்தில் வைத்திருங்கள். எதுவும் நிகழலாம். உங்கள் கருவி மற்றும் காப்பு நகல் ஆகிய இரண்டுடனும் உங்கள் பை திருடப்படலாம். நீங்கள் மடிக்கணினி வைத்திருக்கும் இடம் நீரால் சேதமடைதல் போன்றவை.
  • கருவிகளுக்கு இடையில் இலகுவாக இயக்குவதற்கு, ஒரு முகில் களஞ்சிய முறைமையும் மிகவும் பயன்படும். ஆனால் முகில் காப்புநகல் (cloud storage) முறைமையும் பௌதிக புற வன் இயக்கி (hard drive) அல்லது ஞாபக கோல் (USB) என்பவற்றின் இணைப்பு மிகச் சிறந்ததாகும்.
  • உங்கள் காப்புநகலை கடவுச் சொல்லைக் கொண்டு பாதுகாத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அதோடு சேர்த்து 2 காரணி அதிகாரமளித்தலையும் பயன்படுத்துங்கள். இதில் ஆச்சரியம் என்வென்றால் மக்கள் அடிக்கடி கூருணர்வு மிக்க தரவுகளுடன் வன் இயக்கியை அல்லது ஞாபக கோலை வைத்துவிட்டுச் செல்கிறார்கள்.
  • உங்கள் காப்புநகலுக்கு தீயபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.