முகப்பு » சமூக வலையமைப்பு » இணைய வெளியினூடாக பண மோசடி அச்சுறுத்தல்

இணைய வெளியினூடாக பண மோசடி அச்சுறுத்தல்

இணைய வெளியினூடாக பண மோசடி அச்சுறுத்தல்

பணம் கொடுக்காவிட்டால் இணையவழியில் ஆபாச படங்கள் பார்ப்பதாக தொடர்பு பட்டியலில் உள்ள அனைவருக்கும் அறிவிக்கப் போவதாக மின்னஞ்சல்களில் அல்லது சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருவது தீவிரமாக அதிகரித்துள்ளது.

அதற்கான உண்மையான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது:

இந்த மின்னஞ்சல்களில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதில் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் உள்ளடங்கியிருப்பதோடு எடுமானமாக அனுப்பப்படுகின்றன. சிலவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல காட்சிகள் உள்ள படங்கள் குறைவாகப் பிடிக்கப்பட்டு சிலவற்றில் ‘அசிங்கமான செயல்கள் புரிவது’ காட்டப்படுகிறது.

சிலவற்றில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ள மாதிரிகளுக்கு தொடர்புகள் இருக்கும். நீங்கள் அதை கிளிக் செய்தால் அதன் உள்ளடக்கத்திற்குப் பதிலாக தீயபொருள்(அயடறயசந) உங்கள் தொடர்பு பட்டியலை அணுகும்.

ஆபாச படம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அதைப் பார்த்ததாகச் சொன்னால் அது பயத்தையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்பது அனுப்புபவருக்குத் தெரியும். சில நேரங்களில் உங்கள் உண்மையான மின்னஞ்சல் அல்லது கடவுச்சொற்கள் குறிப்பிடப்படும். அது முன்னைய பாரிய ஊடுருவல் (hack) மூலம் பெறப்பட்டதாக இருக்கும்.

நீங்கள் ஆபாச படம் பார்த்ததாக அல்லது “மோசமான நடத்தை” பற்றி வெளிப்படுத்துவதாக பயமுறுத்தி பணம் பறிக்கும் காணொளியைப் பெற்றால்
  • கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டாம்
  • பதிலளிக்க வேண்டாம்
  • மின்னஞ்சலின் தொடர்பை அணுகல் செய்ய வேண்டாம்
  • குழப்பமடைய வேண்டாம்: ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இது பாரிய மின்னஞ்சல், உங்கள் முறைமை பெரும்பாலும் நிச்சயமாக வேவு பொருளைக் கொண்டிருக்காது.
  • மின்னஞ்சலில் கடவுச்சொல் சரியாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது பயன்படுத்தப்பட்ட எல்லா கணக்குகளிலும் கடவுச்சொல்லை உடனே மாற்றிவிடவும்.
  • அது குறிப்பிடுகிற நிறுவனத்தை அல்லது இணையத்தளத்தை தொடர்பு கொண்டு உங்கள் கடவுச்சொல் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு அறிவிக்கவும். அவர்கள் அது பற்றி புலனாய்வு செய்வார்கள்.

மின்னஞ்சல் மோசடி செயலுக்கான முயற்சியாக இருந்தால் நீங்கள் report@cert.gov.lk க்கு முறைப்பாடு செய்ய முடியும்.