முகப்பு » சமூக வலையமைப்பு » போலி செய்திகள்

போலி செய்திகள்

போலி செய்திகள்

போலி செய்திகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன, ஆனால் அவற்றை பிரதான ஊடகங்களிலும் இணைய பக்கங்களிலும் கூட பார்க்க முடியும். இவை கவனத்தை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தவறாக வழிநடத்துகிற கதைகளாகும். அத்துடன் இந்த கதைகள் சிறிதளவும் கூட உண்மையற்ற ஆக்கக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. எவரும் இவற்றை உருவாக்க, வெளியிட மற்றும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் உண்மை எது போலி எது என்று உறுதிசெய்துகொள்ளுவதற்கு உதவுவதற்கு உங்களுடைய தீவிர சிந்தனை திறனைப் பயன்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

ஒரு கதை வழமைக்கு மாறானதாக அல்லது கொடூரமானதாக இருந்தால் அதைப் பரிசோதிக்கவும்.
  • அதன் மூலம் (source) நம்பத்தகுந்ததா?
  • தகவலின் உண்மையை எங்கே சோதிக்க முடியும்?
  • புகைப்படங்கள் உண்மையானவையா?

நம்பச் செய்வதற்காக போலி படங்களும் காணொளிகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. புகழ்பெற்றவர்கள் சொல்லுவதைப் போன்ற காணொளிகள் உண்மையைத் திரிபுபடுத்தி இணையத்தில் இடுகையிடப்படுகின்றன. மக்களை பிழையாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே புகழ் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதற்குக் காரணம் இத்கைய போலி கதைகளை மக்களின் கண்ணியத்தை தகர்ப்பதற்கும் அவர்களின் நம்பிக்கையை குறைத்து மதிப்பதற்கு அரசியல் முறைமையிலும் உண்மையில் பயன்படுத்த முடியும். போலி கணக்குகளை அல்லது பக்கங்களைக் கையாள்வதன் மூலம் இந்த தவறான தகவல்கள் பரவுவதை நீங்கள் குறைக்க முடியும்.