முகப்பு » சமூக வலையமைப்பு » பாதுகாப்பான இணையவழி சந்திப்பு

பாதுகாப்பான இணையவழி சந்திப்பு

பாதுகாப்பான இணையவழி சந்திப்பு

அதிகளவில், குறிப்பாக கொவிட் தொற்று காலத்தில் நாங்கள் சந்திப்பதற்கு கூட இணையவழி தொடர்பாடலைப் பயன்படுத்தினோம். யாரையாவது இணையவழியில் சந்திப்பதில் உள்ள முக்கியமான விடயம் யாதெனில், அவர்கள் எப்படி தோற்றுகிறார்களோ அப்படி இருப்பதில்லை என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இணையவழியில் உங்களைப்பற்றி என்ன பகிர்கிறீர்களோ அதுபற்றி மிகக் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக படங்களைப் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் நீங்கள் வசிக்கின்ற இடம் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் இணையவழியில் சந்தித்த ஒருவரை சந்திக்க சம்மதித்தால் மிகக் கவனமாக இருக்க வேண்டும். முதல் சந்திப்பு பொது இடத்தில் நம்பிக்கையான ஒருவர் அருகில் இடம்பெறுவது நல்லது.

கொடுமைப்படுத்தும் செய்திகளை ஸ்னெப்சொட் (snapshot) எடுத்து முறைப்பாடு செய்யவும்.