பாதுகாப்பான சுயவிபர கோவை (CV)
உங்கள் சுயவிபர கோவையில் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் பகிர வேண்டாம். அதில் தேசிய அடையாள அட்டை இலக்கம், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன.
மோசடிகளைத் தவிர்த்தல்
தொழில் தளமொன்றில் உங்கள் சுயவிபர கோவையைப் பார்த்த சாத்தியமான தொழில் தருநரிடமிருந்து நீங்கள் மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றால் தொடர்பை அணுகல் செய்யும்போது கவனமாக இருக்கவும். அத்துடன் அவை முறையான தொழில் இடுகைக்குச்(டiமெ) செல்கின்றது என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
வீட்டிலிருந்து வேலைசெய்யும் திட்டங்கள்
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டங்கள் ஊழல் புரிவோர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. அநேகமாக அது உண்மையானதைப் போல் தோன்றலாம். எனவே தொடர்ச்சியான வேலைகளுக்காக இலாபம் ஈட்டும் சலுகைகளைப் பற்றி குறிப்பாக கவனமாக இருக்கவும்.
ஆலோசனை குறிப்புகள்
- நேர்காணலில் சந்திப்பதற்கு முன்னர் சாத்தியமான தொழில் தருநர் நேர்மையானவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்க. அத்துடன் உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்க.
- இணையவழியில் மாத்திரம் தொடர்பு கொண்ட நிறுவனத்துடன் வங்கி விபரங்;களை ஒருபோதும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
- குறிப்பாக ஏதேனும் தொழில்கள் அல்லது விசா போன்றவற்றிற்கு பணம் பரிமாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.