முகப்பு » சமூக வலையமைப்பு » இணைய கொடுமைப்படுத்தல் (Cyberbullying)

இணைய கொடுமைப்படுத்தல் (Cyberbullying)

இணைய கொடுமைப்படுத்தல் (Cyberbullying)

அதிகமானவர்கள் இணையவழியில் செல்லுவதால், அதிகமாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இதில் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் சமூக ஊடகத்தில் ஒரு நபரைப் பற்றிய மோசமான உள்ளடக்கம், அரட்டை அறைகள் போன்றவை இதில் இடம்பெற முடியும்.

இதில் மிகவும் அவமானப்படுத்தும் கொடுமைப்படுத்தல் யாதெனில், யாராவது ஒருவர் வேறொரு நபரின் தனிப்பட்ட படங்களை அல்லது ஏனைய அந்தரங்க தகவல்களைப் பகிர்வதாகும். எனவே மற்றவர்கள் இருக்கும் படங்களை அல்லது காணொளிகளை பகிரும்போது அதிலிருப்பவர்களின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதை இடுகை (post) பண்ணுவதற்கு முன்னர் மற்றவர்களை பற்றியும் சிந்திக்கவும். (அது மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்குமா?)

நல்ல நண்பனாக இருங்கள்

கொடூர செயல்களில் பங்குபற்றாதீர்கள். யாராவது உங்களுக்கு மோசமான அல்லது கெட்ட செய்தியொன்றை அனுப்பினால் அந்த இடுகையின் (post), மின்னஞ்சலின் அல்லது செய்தியின் ஸ்கிரீன்சொட் (screenshot) ஒன்றை எடுக்கவும்.

நீங்கள் அதை விரும்பில்லை என்று அந்த நபருக்குச் சொல்லுங்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்தாவிட்டால் முறைப்பாடு செய்யவும். பின்னர் அந்த செய்தியை அழித்துவிடவும்.

மற்றவர்கள் இணையவழியில் பாதுகாப்பாக இருக்க உதவுங்கள்

நீங்கள் பார்க்கின்ற இணைய பாதுகாப்பு அனர்த்தம் தொடர்பாக அறிவு குறைவாக உள்ள குடும்பத்துடன் அல்லது நண்பருடன் கதையுங்கள்.

நீங்கள் பங்குபற்ற வேண்டாம். இணைய கொடூரத்தை நீங்கள் பார்த்தால் அல்லது குழு அரட்டையின் நெருங்கிய படங்களைப் பகிர்ந்துகொண்டால், அதைப்பற்றி கதையுங்கள். அது நல்லதல்ல என்பதை அவர்களுக்கு அறியச்செய்யுங்கள்.