மெய்நிகர் தனியார் பிணையம் (VPN)

மெய்நிகர் தனியார் பிணையம் (VPN)

நம்பிக்கையற்ற வலையமைப்புகளில் கூருணர்வுமிக்க தகவல்களைப் பாதுகாப்பதற்காக VPN இணைப்புகள் மறைகுறியீட்டியலினைப் (Cryptography) பயன்படுத்துகின்றன. இந்த சமிக்ஜைகளை மற்றும் தரவு ரகசியத்தன்மை பாதுகாப்பினை உறுதிப்படுத்த, VPN கள் உங்கள் தகவல்களை மறைகுறியாக்குகின்றன இவை உங்களை இணைய குற்றவாளிகளிடமிருந்து மட்டுமல்ல, இணைய சேவை வழங்குநரிடமிருந்தும் பாதுகாப்பதற்காகும். இந்த படிமுறைகள் இணையவழியில் நீங்கள் எங்கே செல்லுகிறீர்கள் மற்றும் என்ன செய்கிறீர்கள் என்ற தகவலை மற்றவர்கள் சேகரிப்பதையும் கண்காணிப்பதையும் கடினமாக்குகிறது. அத்துடன் பொது வலையமைப்பைப் பயன்படுத்தும்போது உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கிறது.

ஒரு நல்ல VPN ஐ பரிந்துரைக்கப்பட்ட போதும், நீங்கள் அனைத்து இற்றைப்படுத்தல்களையும் நிறுவ வேண்டும். அத்துடன் மேலும் பாதுகாப்பு திட்டுக்களைப் (security patches) பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் இரு-காரணி அதிகாரமளித்தலைப் பயன்படுத்துவதையும் தொடர வேண்டும்.