உங்களுடைய கடவுச்சொல் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அது களவாடப்படலாம் அல்லது உங்களை ஏமாற்றி அதை வெளிப்படுத்தச் செய்யலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் உதவுவதற்கு இயலுமான சந்தர்ப்பங்களில் இரு காரணி அதிகாரமளித்தலைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்கள் புகுபதிவு (login) நடவடிக்கை முறைக்கு மேலதிக சரி பார்த்தல் படிமுறையில் ஈடுபடுகிறது. வழமையாக புகுபதிவுக்கு உங்கள் பயனர் பெயரையும் கணக்கையும் பதிகிறீர்கள். இரு காரணி அதிகாரமளித்தலோடு உங்கள் அடையாளத்தின் இரண்டாவது சரிபார்த்தலை வழங்க வேண்டியிருக்கும். உதாரணமாக, குறுஞ்செய்தி (SMS) மூலம் உங்களுக்கு அனுப்பப்பட்ட குறியீட்டைப் பதியும்படி கேட்கப்படலாம் அல்லது உங்களுக்கு அணுக்கம் உள்ள இரண்டாவது செயலியால் உருவாக்கப்பட்டதாக அது இருக்கலாம்.