விடயங்களின் இணையம் (IOT)

விடயங்களின் இணையம் (IOT)

5G பயன்படுத்தப்படும் போது இணையம் வேகமாகிறது. அத்துடன் எமது நடவடிக்கைகள்; மேலும் இணையவழிக்குப் போய்க்கொண்டிருக்கின்றன: வீட்டு உபகரணங்கள், பாதுகாப்பு முறைமைகள், எச்சரிக்கை மணி முறைமைகள், வீதி ஒழுங்கு சமிக்ஞை விளக்குகள், உற்பத்தி கோடுகள். இது Internet of Things (IOT) எனக் குறிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டில் சுமார் 25 பில்லியன் கருவிகள் இணையவழியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற எல்லாவற்றையும் போன்று, கருவிகளைப் பயன்படுத்தும்போது அதை இணையவழியில் கட்டுப்படுத்த முடியும் எனவே அடிப்படை பாதுகாப்பு ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியமாகும். ஏனெனில் பலவீனமான பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான சாதனங்களை நுட்பமாய் சோதனை செய்ய இணையவழி குற்றவாளிகள் பொறியிகளைப் (bots) பயன்படுத்துகின்றனர. அவர்கள் இணையத்தில் இணைக்கப்பட்ட கருவிக்குள் புகுந்தவுடன் மிக விரைவாக உங்கள் தனிப்பட்ட தகவல் உள்ளிட்ட தகவல்களை அவர்கள் பதிவிறக்கம் செய்ய முடியும். அத்துடன் உங்கள் வலையமைப்பையும் அவர்கள் ஊடுருவல் செய்ய முடியும்.

இதை தவிர்ப்பதற்கு உதவுவதற்கு
  • ஒரு கருவியைப் பொருத்தும்போது, எப்பொழுதும் முன்னிருந்த இயல்புநிலை கடவுச்சொல்லை மாற்றி வலுவான, தனிப்பட்ட கடவுச் சொற்களைப் பயன்படுத்தவும்.
  • தகவல் திட்டுக்களைக் கொண்டிருக்க கூடுமாகையால் உடனடியாக மென்பொருளை இற்றைப்படுத்திக்கொள்ளவும்.