முகப்பு » குறுஞ்செய்தி வழியான ஊழல்

குறுஞ்செய்தி வழியான ஊழல்

குறுஞ்செய்தி வழியான ஊழல்

இது குறுஞ்செய்தி (SMS) வழியாக ஊழல் புரிவதாகும். சில செய்திகளுக்கு பதில் அனுப்பும்போது ஒரு நபரின் பணத்தை அல்லது அடையாளத்தைக் களவாட அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

பொய்யாக நடித்து நம்ப வைத்து அனுப்பப்படுகிற செய்திகளை உள்ளடக்கிய உதாரணங்கள்
 • உங்கள் வங்கி, ஒழுங்கற்ற நடவடிக்கை அல்லது நிதி போதாது போன்ற ‘உங்கள் கணக்கில் பிரச்சினை உண்டு’ என்ற விடயங்களை உங்களுக்கு அறிவித்தல்.
 • சில்லறை வியாபாரி, “வவுச்சர்களை” அல்லது “பரிசு அட்டைகளை” வழங்க முன்வருதல்.
 • அப்பிள் அல்லது கூகுல் போன்ற தொழில்நுட்ப வழங்குனர் ‘உங்கள் கணக்கை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று உங்களுக்கு அறிவித்தல்.
 • பொதிகளை விநியோகிக்கும் ஒரு நிறுவனம் “ஒரு பொதியினை (parcel) உங்களுக்கு விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என உங்களுக்கு அறிவித்தல்.
 • வருமான வரி சேவைகள், “உங்களுடைய வரி மீளளிக்கப்படவுள்ளது” என உங்களுக்கு அறிவித்தல்.
ஊழலுக்கு அகப்படுவதை எப்படி தவிர்ப்பது
 • எழுத்து வடிவ செய்திகள் 100% நேர்மையானவை மற்றும் நல்ல-நோக்கத்தோடு அனுப்பப்பட்டவை என நிச்சயப்படுத்திக்கொள்ளும் வரை அவற்றின் தொடர்பை கிளிக் செய்ய வேண்டாம்.
 • எழுத்து வடிவ செய்திகளுக்கு பதில் அனுப்புவதற்கு முன்னர் உங்கள் செயலைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள்.
 • அத்தகைய அழைப்பாளர் அந்த அழைப்பை துண்டித்து உங்கள் வங்கியை அல்லது அட்டை வழங்குனரைத் தொடர்புகொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொண்டால் உங்களுடைய வங்கிக் கூற்றில் அல்லது உங்கள் வங்கியின் ஏனைய ஆவணங்களில் – அல்லது உங்களுடைய அட்டையின் பின்புறத்தில் உள்ள இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவும். அழைப்பாளர் வழங்கிய இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டாம்.
 • அனுப்பியவர், நேர்மையானவராக இருந்தால், உண்மையில் இந்த எழுத்து வடிவ செய்தி வழியாக அனுப்பியிருக்கலாம் தானே என உங்களையே கேட்டுப்பாருங்கள்.
 • நிதி சார்ந்த பிரச்சினைகள் அல்லது சலுகைகள் உண்மையில் நல்லது போல் தோன்றும், உண்மையில் அவர்கள் எப்படிபட்டவர்கள் என அறிந்துகொள்ளுங்கள்.
 • சந்தேகம் எழுந்தால், அந்த எழுத்துவடிவ செய்தியை அனுப்பிய தனிப்பட்டவரின் அல்லது நிறுவனத்தின் சரியான இலக்கத்தை அழைத்து, அதன் அதிகாரத்தன்மையை சரிபார்த்துக்கொள்ளவும்.
 • ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த எழுத்து வடிவ செய்தி உங்களுக்கு நம்பிக்கையானவரிடமிருந்து வந்தால் கூட அவர்களுடைய இலக்கம் ஊடுருவப்பட்டிருக்கலாம் (hack) அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம்.
 • அந்த எழுத்து வடிவ செய்திக்கு பதில் அளிக்க வேண்டாம். அப்படி செய்வது உங்களுடைய விபரங்கள் “உறிஞ்சிகளின்” (suckers) பட்டியலில் சேர்க்கப்படுவதாக அமையும். அத்துடன் அதேபோன்ற செய்திகளால் நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள்.