உங்களுடைய கருவிகளைத் தாக்கி உங்களுடைய அடையாளத்தை களவாடுவதற்கு இணைய குற்றவாளிகள் மென்பொருள்களிலும் செயலிகளிலும் பலவீனத்தையும் வடுபடும் தன்மையையும் பயன்படுத்துகின்றனர். இந்த பலவீனத்தையும் வடுபடும் தன்மையையும் பொருத்துவதற்கு மென்பொருள் மற்றும் செயலி இற்றைப்படுத்தல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இயலுமானளவு விரைவாக இவற்றை நிறுவுதல் உங்கள் கருவிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இற்றைப்படுத்தல் உங்கள் செயலாற்றுகையை மேம்படுத்தும்.
இற்றைப்படுத்தல்கள் கிடைக்கின்றன என்பதை உங்கள் திரையில் எச்சரிக்கை வடிவத்தில், மென்பொருள் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் பொதுவாக ஓர் அறிவித்தலைப் பெறுவீர்கள். இயலுமானளவு விரைவாக இதைச் செய்யும்படி உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.
இற்றைப்படுத்தல்களைப் பதிவிறக்கம் செய்து நிறுவுவதற்கு சில நிமிடங்கள் எடுக்கலாம். ஆனால் குறிப்பிடத்தக்களவு நேரத்தை சேமிப்பதோடு நீண்ட பிரச்சினைகளையும் தீர்க்கிறது. அத்துடன், அடையாள திருட்டுக்குப் பலியாகும் ஆபத்தைக் குறைக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்தும்போது சிறந்த பாதுகாப்புக்கும் அபாயமற்ற தன்மைக்கும் உங்களுடைய உலாவிக்கு புது இற்றைப்படுத்தல்களை (updates) எப்பொழுதும் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.