முகப்பு » அடையாளத்தைக் களவாடல்

அடையாளத்தைக் களவாடல்

அடையாளத்தைக் களவாடல்

படங்களையும் ஏனைய தரவுகளையும் உங்களை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியும். தனிப்பட்ட தகவல்களை உங்களுடைய கணக்கை அணுகுவதற்கு, அல்லது அடையாளத்தை களவாடுவதற்குப் பயன்படுத்த முடியும். நிறுவனங்கள் விளம்பர நோக்கத்திற்காக உங்களுடைய தரவுகளை விற்க முடியும். யாருக்கு என்று உங்களுக்குத் தெரியாது.

யாராவது ஒருவர் உங்கள் கணக்கை அணுகும்போது அவர்கள் உங்களைப்போல் நடிக்க முடியும். உதாரணமாக உங்கள் பெயரில் ஒரு போலி கணக்கை ஆரம்பிப்பதன் மூலம் உங்களைப்போல் நடிக்க முடியும். (ஒருவருக்கு உங்கள் பெயரில் அடையாள அட்டைக்கு அல்லது ஏனைய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்).

என்ன செய்வது:
  • யாராவது உங்களைப்போல் நடிப்பதாக அறிந்தால், உடனே முறைப்பாடு செய்யவும். அது எந்த ஊடகத்தில் தோன்றினாலும் அதையும் உட்படுத்தி முறைப்பாடு செய்யவும்.